வட அமெரிக்கா

ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

முன்நிபந்தனை எதுவுமின்றி சரண் அடையும்படி ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

போர் 6ஆவது நாளாகத் தொடரும் நிலையில் அவரது எச்சரிக்கை வந்திருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்துகொண்டு ஈரானைத் தாக்கலாம் என்ற ஊகம் நிலவுகிறது.

அமெரிக்கா பொறுமை இழந்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் தொடங்கியது. இருநாட்டுக்கும் இடையே போர் நீடிக்கிறது.

இதற்கிடையே திரு டிரம்ப் ஈரானிய உச்சத்தலைவர் ஆயதுல்லா அலி ஹமேனியைக் கொல்லும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஆயத்துல்லா எங்கே இருக்கிறார் என்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கெட்ஸ் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசேனுக்கு நேர்ந்த அதேகதி ஆயதுல்லாவுக்கும் ஏற்படும் என்று எச்சரித்தார்.

ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேன் அமெரிக்கப் படையெடுப்பில் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, விசாரணைக்குப்பின் 2006இல் தூக்கிலிடப்பட்டார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!