வட அமெரிக்கா

உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக கிறிஸ்டி நோயமை தேர்வு செய்துள்ள ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்த சவுத் டக்கோட்டாவின் ஆளுநர் கிரிஸ்டி நொஎம்மைத் தேர்வுசெய்துள்ளதாக CNN’ தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் வரும் ஜனவரி 20ஆம் திகதி அதிகாரபூர்வமாகப் பதவியேற்கும்போது, டாம் ஹொமன், ஸ்டீஃபன் மில்லர் ஆகியோருடன் நொஎம்மும் டிரம்ப் நிர்வாகத்தில் இணைந்துகொள்வார் என்று CNN கூறியது. ஹோமன், மில்லர் போல அல்லாமல் நொஎம்மின் பதவிக்கு செனட்டின் உறுதிப்பாடு தேவைப்படுகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு நிறுவப்பட்டது.

இணையப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பயங்கரவாத மிரட்டல்களை விசாரிப்பது, இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான நடவடிக்கைகள், சுங்கத்துறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அது கையாள்கிறது.அத்துறை ரகசியச் சேவைப் பிரிவையும் நிர்வகிக்கிறது.

இந்நிலையில் நொஎம்(52) குடிநுழைவு தொடர்பான டிரம்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆவணமில்லாத குடியேறிகளை பெரிய அளவில் திருப்பி அனுப்பப்போவதாக டிரம்ப் கொடுத்த உறுதியும் அவற்றில் அடங்கும்.

அமெரிக்காவிலிருந்து மில்லியன்கணக்கான குடியேறிகளை வெளியேற்றும் முயற்சிகளுக்குப் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.சீனா, கியூபா, நிகாராகுவா போன்ற சில நாடுகள் குடியேறிகளைக் கொண்ட விமானங்களை வரவேற்க எப்போழுதும் ஒப்புதல் அளிப்பதில்லை.

முதல் தவணையில், டிரம்ப் முன்னேற்றம் கண்டபோதும், பெரிய அளவில் குடியேறிகளை வெளியேற்றும் திட்டத்தை அவர் நிறைவேற்றத் தவறினார்.அவரது முதல் தவணையில், திரும்ப அனுப்பப்பட்ட குடியேறிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 360,000ஐத் தாண்டியதில்லை.

முன்னைய அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் காணப்பட்ட எண்ணிக்கையை விட அது குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.

(Visited 84 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்