வட அமெரிக்கா

டிரம்ப்பிற்கு வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கால் வீக்கத்தை ஏற்படுத்தும் நரம்புக் கோளாறு

நரம்புப் பிரச்சினை காரணமாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இடது கால் கீழ்ப் பகுதியில் வீக்கமும் வலது கையில் தடிப்பும் ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (ஜூலை 17) தெரிவித்தது.

டிரம்ப்பின் கணுக்கால்கள் வீங்கியிருந்ததையும் அவர் கையில் ஏற்பட்ட தடிப்புகள் ஒப்பனையால் மறைக்கப்பட்டிருந்ததையும் காட்டும் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை இத்தகவலை வெளியிட்டது.

அவ்விரு பிரச்சினைகளும் அதிக பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் கேரொலின் லீவிட், செய்தியாளர் கூட்டத்தின்போது டிரம்ப்பின் மருத்துவர் தந்த கடிதத்தை வாசிக்கும்போது குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் பொதுவாகப் பலருக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும் பலமுறை கைகுலுக்குவதால் அவர் கையில் தடிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்பிரச்சினைகளைக் காட்டும் படங்கள் வெளியானவுடன் 79 வயது டிரம்ப் மோசமான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

அத்தகைய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளை மாளிகை இவ்விரங்களை வெளியிட்டது.

சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து டிரம்ப் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவரின் மருத்துவரும் அமெரிக்கக் கடற்படை அதிகாரியுமான டாக்டர் ‌ஷோன் பார்பரெல்லா கடிதத்தில் தெரிவித்தார்.அந்தக் கடிதத்தை லீவிட் கலந்துகொண்ட செய்தியாளர் கூட்டத்துக்குப் பிறகு வெள்ளை மாளிகை வெளியிட்டது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்