அமெரிக்க வரலாற்றில் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் – கடுமையாக விமர்சித்த டிரம்ப்
அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் என டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டின் முதல் 2 நாட்களில் நடந்த அசம்பாவிதங்களுக்கு ஜனநாயக கட்சியின் திறந்த எல்லைக் கொள்கை தான் காரணம் என கூறினார்.
பயங்கரவாதம் மற்றும் பிற வன்முறை சம்பவங்களால் அமெரிக்காவில் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமது பிரச்சாரத்தின்போது போது பலமுறை கூறியிருந்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு நிலைமை மோசமாகி விடும் என தாம் கூறிய நேரம் தற்போது வந்துவிட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
பைடனும், அவரது கட்சியினரும் நாட்டிற்கு செய்ததை மறக்க முடியாது என டிரம்ப் சாடினார்.





