இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

புதிய வரிகளிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கு விலக்கு அளித்த டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

கடந்த 2ம் தேதி பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!