வட அமெரிக்கா

டிக்டாக்கை வாங்குவது குறித்து டிரம்ப் பல தரப்புகளுடன் ஆலோசனை; 30 நாட்களில் முடிவு

பிரபல டிக்டாக் தளத்தை வாங்குவது குறித்து பலருடன் கலந்து பேசி வருவதாகவும் செயலியின் தலையெழுத்து என்ன என்பதன் முடிவு இன்னும் 30 நாள்களில் தெரியவரும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“டிக்டாக் பற்றி பலரிடம் பேசி உள்ளேன். அதில் அதிக ஆர்வம் இருப்பதை உணர முடிகிறது,” என்று ஃபுளோரிடாவுக்குச் சென்றுகொண்டிருந்த ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்‘ விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறினார் அவர்.

டிக்டாக்கை மீட்டெடுப்பது தொடர்பான திட்டம் ஒன்றை திரு டிரம்ப்பின் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக முன்னதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. மென்பொருள் நிறுவனமான ‘ஆரக்கல்’, முதலீட்டாளர் குழு ஆகிய இரு தரப்புகளின் உதவியுடன் செயலியின் செயல்பாடுகளை திறம்பட கையாள்வது இத்திட்டத்தில் அடங்கும் எனக் கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தப்படி, ‘டிக்டாக்’கின் தாய் நிறுவனமான ‘பைட்டான்ஸ்’ (ByteDance), நிறுவனத்தில் சிறுபான்மை பங்கைத் தொடர்ந்து வைத்திருக்கும். இருப்பினும், செயலியின் படிமுறை, தரவுச் சேகரிப்பு, மென்பொருள் புதுப்பிப்புகள் ஆகியவை ஆரக்கல் நிறுவனத்தின் மேற்பார்வையில் இருக்கும். இந்நிறுவனம் ஏற்கெனவே டிக்டாக்கின் ‘வெப்’ உள்கட்டமைப்புக்கு அடித்தளமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிந்து வந்தது.

இருப்பினும், செயலியை வாங்குவது குறித்து ஆரக்கல் நிறுவனத்தின் லேரி எல்லிசனிடம் தாம் இன்னும் பேசவில்லை என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆரக்கலுடன் தாம் ஒப்பந்தம் ஏதும் இன்னும் செய்துகொள்ளவில்லை என்ற அவர், “டிக்டாக்கை வாங்குவது குறித்து பலரும், அதிலும் தகுதியானவர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். அந்த முடிவை நான் அநேகமாக அடுத்த 30 நாள்களில் எடுத்து விடுவேன். டிக்டாக்கை நம்மால் காப்பாற்ற முடிந்தால், அது நல்லதுதான் என்று நினைக்கிறேன்,” என்றார்.

செயலியை 170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!