புட்டின் உக்ரேனுடன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயார் – டிரம்ப் நம்பிக்கை

உக்ரேனுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தயாராக இருக்கிறார் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அலாஸ்காவில் இன்று புட்டினை சந்திக்க உள்ளதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க டிரம்ப் இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புட்டினும் ஜெலன்ஸ்கியும் போரை நிறுத்திக் கொண்டு அமைதியை ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் உக்ரேன் தலைவருடன் சேர்ந்து மேலும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் புட்டினுடனான முதல் சந்திப்பு தோல்வியில் முடிவதற்கு 25% சாத்தியம் இருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வர முயலும் அமெரிக்காவைத் புட்டின் பாராட்டியுள்ளார்.
டிரம்ப்புடனான சந்திப்பில் புட்டின் அணுவாயுத ஒப்பந்தம் செய்துகொள்வதைப் பற்றியும் பேசலாம் என்று நம்பப்படுகிறது.