தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது 25% வரிகளை அறிவித்த டிரம்ப்

தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் பொருட்களுக்கு 25% புதிய வரியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை அதன் மிகவும் ஆக்ரோஷமான வரிகளில் சிலவற்றில் விதித்த 90 நாள் இடைநிறுத்தம் முடிவடையவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளன.
நிதிச் சந்தைகளில் தனது ஆரம்ப அறிவிப்பு கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய பின்னர், பல்வேறு அரசாங்கங்களுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அனுமதிக்கும் வகையில் அதிக வரிகளை டிரம்ப் நிறுத்தி வைத்திருந்தார்.
ஜூலை 9 ஆம் தேதி அதிக வரிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அவற்றை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் இப்போது தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)