அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சி – டிரம்ப் குற்றச்சாட்டு

பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டொலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வளர்ந்து வரும் பொருளாதார கூட்டமைப்பு வேகமாக மறைந்து வருகிறது. அவர்கள் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், விரைவில் அவர்கள் முடிவுக்கு வருவார்கள்” என அவர் தெரிவித்தார்.
எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் மேலும் கூறி, பிரிக்ஸ் அமைப்பினர்கள் டொலரை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
அவர்களுக்கு இந்த நடவடிக்கையில் வெற்றியடைய அனுமதி தரமாட்டோம். பிரிக்ஸ் அமைப்பிற்கு பொருளாதார ஒற்றுமை இல்லாமல், கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது” என்றார்.
இந்த உரையில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாங்கள் பல போர்களை நிறுத்தினோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தீவிர அணு ஆயுத நாடுகள் மற்றும் அவை பல ஆண்டுகளாக மோதிக் கொண்டிருந்தன. சமீபத்தில் ஈரானில் நாம் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தால், அவர்கள் அணுசக்தி திறனைக் கட்டுப்படுத்தி, அதனை முற்றுகையிட்டோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுத போரை நோக்கி சென்றிருந்தது. ஆனால், வர்த்தக வழிமுறைகள் மூலம் அதை சமாளித்தோம்” என்றார்.