ரணிலின் கைது குறித்து முன்கூட்டியே கருத்து வெளியிட்டவருக்கு ஏற்பட்ட சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்பே அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என கருத்து வெளியிட்ட யூடியூபர் சிக்கலில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த யூடியூபர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அளித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்க வரும் போது கைதுசெய்யப்படுவார் என குறித்த யூடியூபர் அவருடைய காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கையை அடுத்து இந்த விடயம் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை அதிகாரிகள் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் றை ஊடகப்பேச்சாளரை தொடர்பு கொண்ட போது, இந்த விடயம் தொடர்பான விசாரணையை புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.