இலங்கை

வீதியில் உலர வைத்த நெல்லுடன் சறுக்கி விழுந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!!

வீதியில் உலர வைத்த நெல்லுடன் சறுக்கி விழுந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!!

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மொரவெவ பிள்ளையார் கோயில் அருகே இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து மொரவெவ பிரதேசத்திற்கு வேளாண்மை அறுவடைக்காக வந்த மெசின் இயந்திரத்திற்கு உடைந்த பொருட்களை பொருத்துவதற்காக உதிரி பாகங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த இளைஞர் வீதியில் உலர வைத்த நெல்லில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்த நிலையில் படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கிளிநொச்சி -வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த எஸ்.சுபனாத் ( 33வயது) எனவும் தெரியவந்துள்ளது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!