திருகோணமலை – நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள்
இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று (01) திருகோணமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட குறித்த போராட்டத்தில் இதுவரை நியமனம் பெறாத தொண்டர் ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.
திருகோணமலை அபயபுர சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டமானது நடை பவனியாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் வரை சென்றிருந்தனிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் செயலாளரிடம் மஹஜர் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பவனியாக சென்ற குறித்த ஆசிரியர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
18 வருட காலங்களுக்கும் அதிக சேவைக்காஅல்த்தினைக் கொண்ட குறித்த ஆசிரியர்கலுக்கு இற்றைவரை நியமனம் வழங்க்ப்படவில்லை என்பதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிந்த போதிலும் கிழக்கு மாகாண சபையானது செயற்பாட்டில் இருந்தபோது நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பல ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நேர்முகத் தேர்வில் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய பலர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமக்கு நியம் வழங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் இதனை மத்திய அரசாங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்கள் தமக்கு தெரிவித்ததாகவும் அதன் காரணமாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தொடர்புகொண்டு அவரூடாக தமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள நம்பிக்கை கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தனர்.