யூடியூபர் சவுக்கு சங்கர் மீது திருச்சி-முசிறி துணைக் காவல் கண்காணிப்பாளர் புகார்

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும் தரக்குறைவாக பேசித் தொடர்பாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
தற்போது திருச்சி மாவட்டம், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் இந்த காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் காவலர்களை மிக, மிக மோசமாக சித்தரித்துள்ள சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பி யாஸ்மின் தற்போது புகார் அளித்துள்ளார்.
(Visited 27 times, 1 visits today)