யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய திருச்சி நீதிமன்றம்
ரெட்ரெட் பிக்ஸ் வலைதளத்தில் சவுக்குசங்கரின் நேர்காண ஒளிபரப்பட்டது அந்த நேர்காணலில் தமிழக காவல்துறையில் பணியாற்ற பெண்களுக்கு குறித்து அவதூறு பேசிய தொடர்பாக ஏற்கனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
அவரது வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக விவாதத்தில் இந்த நேர்காணலை ஒளிபரப்பு செய்த இணையதளத்தின் எடிட்டரை ஏன் கைது செய்யவில்லை என தனது கருத்தை தெரிவித்ததை அடுத்து கடந்த 10ம் தேதி டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை ஆய்வாளர் வீரமணி மற்றும் தனிப்படையினர் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து திருச்சி சைபர் கிரைம் அலுவலகத்திற்கு 13ஆம் தேதிஅழைத்து வரப்பட்டு விசாரணைக்கு பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தினர்.
அவருக்கு இம்மாதம் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி காவல்துறையின் கஸ்டடிக்கு ஒரு நாள் நீதிபதி உத்தரவை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இன்று பெலிக்ஸ் ஜெரல்டு தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதில் 6மாதத்திற்கு திருச்சி கணினிசார் குற்றவியல் பிரிவில் மாதத்திற்கு 2முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை சிறையிலிருந்து பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீனில் வெளி வர வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் தெரிவிக்கின்றனர்.