சிரியாவில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!
சிரியாவில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற தற்கொலைக்கு குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
எலியாஸ் (Elias) தேவாலய உறுப்பினர்கள் திருப்பலியை நடத்தி, விளக்குகளால் ஆன மரத்தில் இறந்தவர்களின் படத்தினை தொங்கவிட்டப்படி அந்த மரத்தை ஒளிரச் செய்துள்ளனர்.
இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு படையினர் உதவி செய்ததுடன், பலத்த பாதுகாப்பையும் வழங்கியிருந்தனர்.
கடந்த ஜுன் மாதம் டமாஸ்கஸின் (Damascus) புறநகரில் உள்ள ட்வீலாவில் (Dweil) உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் ஏறக்குறைய 25 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





