ஐரோப்பா செய்தி

ஸ்லோவாக்கியாவில் (Slovakia) நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள் – பலர் வைத்தியசாலையில்!

ஸ்லோவாக்கியாவில் (Slovakia) இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிராட்டிஸ்லாவா (Bratislava) பகுதியில் உள்ள பெசினோக் (Pezinok) என்ற நகரத்திற்கு அருகே நேற்று (10.11)  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிராட்டிஸ்லாவா (Bratislava) பல்கலைக்கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரயில் ஓட்டுநர்கள் இருவரும் மது மற்றும் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் போதைப்பொருளை எடுத்துக்கொள்ளவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!