கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயிலை நிறுத்தத் தவறியதால் நேர்ந்த விபரீதம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில், குறித்த இடத்தில் புகையிரதத்தை நிறுத்த தவறியதன் காரணமாக, புகையிரத நடைமேடை மீது இன்று ரயில் மோதியுள்ளது.
புகையிரத அதிகாரிகளின் கூற்றுப்படி, புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி தனது பயணத்தை பிற்பகல் 2:35 மணிக்கு தொடங்குவதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் பிளாட்பார்ம் இலக்கம் 1 க்குள் நுழைந்து கொண்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தின் விளைவாக எந்த காயமும் ஏற்படவில்லை, இருப்பினும் ரயிலின் முன் பகுதி மற்றும் நடைமேடையின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இச்சம்பவத்தால் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படவில்லை, மேலும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை அளவில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)