Site icon Tamil News

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தடை: ரயில்வே திணைக்களம்

இன்று (16) பிற்பகல் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்தொன்று இன்று மதியம் 12.15 அளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.

இந்நிலையில்  ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version