டென்மார்க்கில் ரயில் ஒன்று வாகனத்துடன் மோதி விபத்து – ஒருவர் பலி, பலர் படுகாயம்!
தெற்கு டென்மார்க்கில் உள்ள டிங்லெவ் நகருக்கு அருகிலுள்ள ஒரு கடவையில் பயணிகள் ரயில் ஒன்று வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏராளமான அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டென்மார்க்கின் ரயில் வலையமைப்பை இயக்குவதற்குப் பொறுப்பான நிறுவனமான பேன்டன்மார்க், லெவல் கிராசிங்கில் ரயில் ஒரு வாகனத்துடன் மோதியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறியது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





