செய்தி

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அபிஜீத் பருச்சுரு, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவந்தார்.

அண்டை மாநிலமான கனெக்டிகட்டில் வசித்துவந்த அவரது பெற்றோர், மகனை தொடர்புகொள்ள முடியவில்லை என அளித்த புகாரின் பேரில், அபிஜீத்தின் செல்போன் சிக்னலை டிராக் செய்த பொலிஸார் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த கார் ஒன்றில் இருந்து அவரை சடலமாக மீட்டனர்.

தங்கள் மகனை யாரோ பல்கலைக்கழகத்தில் வைத்து கொலை செய்து உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளதாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி