பிரான்ஸில் ரயிலின் மீது ஏற முற்பட்ட அகதிக்கு நேர்ந்த துயரம்
பிரான்ஸில் Eurostar ரயிலின் மீது ஏற முற்பட்ட அகதி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்துக்கு வருகை தந்த அகதி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்த EuroStar தொடருந்து தரித்து நின்ற பகுதிக்குச் சென்று, அதன் மீது ஏற முற்பட்டுள்ளார்.
அதன்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இரவு 10.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அகதி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 17 times, 1 visits today)





