இலங்கையில் நடந்த துயரம் – மரணிக்கும் முன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மீனவர்கள்

கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்து உயிரிழந்த நால்வரின் சடலம் இன்று காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சடலத்தை தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தங்காலை நீதவான் உத்தரவிட்டார்.
டெவோன் 05 என்ற பல் நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் திகதி பயணித்து தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
இதற்கிடையில், அங்கிருந்த மீனவர்கள் கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.
அப்போது அந்த படகில் இருந்த 6 மீனவர்களும் கடும் நோய்வாய்ப்பட்டு 4 மீனவர்கள் கடந்த 29ம் திகதி உயிரிழந்தனர்.
படகில் இருந்த மற்ற இரு மீனவர்களில் ஒருவரும் உயிரிழந்ததுடன், அவரது உயிரைக் காப்பாற்றிய மீனவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
படகில் உயிரிழந்த நான்கு மீனவர்களின் சடலங்களும் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வந்த தங்காலை நீதவான் விசாரணைகளை ஆரம்பித்தார்.
பல நாள் மீன்பிடிப் படகில் உறைவிப்பான் கொண்ட தொட்டியில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் நீதவான் முன்னிலையில் கரைக்குக் கொண்டுவரப்பட்டு இறந்த மீனவர்களின் உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து சடலங்களை தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தங்காலை தலைமையக பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த விபத்தை எதிர்கொண்ட 6 மீனவர்கள் கடைசியாக செல்ஃபி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில், சந்தேகப்படும்படியான மது பாட்டிலை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.