ஆசியா செய்தி

தென் கொரியாவில் சோகம் – விமான விபத்தில் ஒரே குடும்பத்தின் 9 பேர் மரணம் – நிர்க்கதியான நாய்

தென் கொரியாவில் முவான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிழந்த நிலையில் நாய் தனித்துப்போயுள்ளது.

அவர்களுடைய வளர்ப்பு நாயான Pudding நிர்க்கதியானது. எங்கோ சென்ற உரிமையாளர்கள் திரும்ப வரவில்லை என நாய் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு என்ன ஆனது என்பதை அறியாத நாய் உரிமையாளர்களைத் தேடிச் சென்றது. சௌத் ஜுல்லா மாநிலத்தின் இயோங்காங் பகுதியில் உள்ள கிராமத்தில் அது அங்கும் இங்கும் திரிந்தது.

கிராமத்தின் கடைத்தெருக்குச் சென்று அங்கு வரும் கார்களையும் பேருந்துகளையும் பார்த்து நின்றுள்ளது. தன்னைச் செல்லமாக வளர்த்தவர்கள் அவற்றில் இருப்பார்களா என நாய் தேடியுள்ளது.

ஆனால் யாரையும் காணவில்லை. Care எனும் விலங்குப் பாதுகாப்புக் குழு Pudding நிலையை அறிந்து, நாயைக் காப்பாற்றியது.

நாய்க்குப் புது உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை eju Air விமானம் விபத்துக்குள்ளானதபோது 179 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் இருந்த இரு சிப்பந்திகள் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!