பிரான்ஸில் நடந்த சோகம் – சிறுமி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

பிரான்ஸில் சிறுமி ஒருவர் எட்டாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்ட போதும், சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.
இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை Clichy (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Camille-Claudel வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் தனது பெற்றோர்களுடம் வசிக்கும் 17 வயதுடைய சிறுமி ஒருவர், அதிகாலை 3 மணி அளவில் ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார்.
உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு, சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 12 times, 1 visits today)