இலங்கை பலாங்கொடையில் நடந்த சோகம்: தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பரிதமாக மரணம்

பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துரவில், லொறியை பின்னோக்கிச் செல்லும் போது தந்தையொருவர் தவறுதலாக தனது ஒரு வயது மற்றும் ஏழு மாத மகன் மீது மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, 39 வயதான சாரதி வீட்டிற்கு எதிரே நிறுத்தப்பட்டிருந்த லொறியை பின்னோக்கிச் செல்ல முற்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்வதால், குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்ட சாரதி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)