செய்தி

யாழில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும் சேயும் கடந்த 16ஆம் திகதி வீடு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடலில் சிவப்பு கை காலில் அவதானிக்கப்பட்டது.

இந்நிலையில் குழந்தை மீண்டும் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, அவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!