இந்தோனேசியாவில் இலவச பள்ளி உணவை சாப்பிட்ட 400 குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயரம்!

இந்தோனேசியாவின் மேற்கு பெங்குலு மாகாணத்தில் இலவச பள்ளி உணவை சாப்பிட்ட பிறகு சுமார் 400 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் முதன்மைத் திட்டத்துடன் தொடர்புடைய மிக மோசமான உணவு திட்டம் இதுவென விமர்சிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காக ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடக அறிக்கைகள் மோசமான சுகாதாரம்தான் காரணம் என்று குறிப்பிடுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)