இந்தியா செய்தி

மாணவர் விசாவில் ரஷ்யாவிற்கு சென்ற இரு இந்தியர்களுக்கு நேர்ந்த துயரம்!

மாணவர் விசாவில் ரஷ்யாவிற்கு பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் உக்ரைன் போரில் ஈடுபட வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரைச் ( Bikaner) சேர்ந்த 22 வயதான அஜய் கோதாரா மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்த 30 வயதான ராகேஷ் குமார் மௌரியா (Rakesh Kumar Maurya) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இருவரும் மாணவர் விசாவில் ரஷ்யாவிற்கு தனித்தனியாகச் சென்றிருந்தனர், ஆனால் பின்னர் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட வீடியோக்களில் அவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு  முன்னணி வரிசையில் பணியமர்த்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

குறித்த இருவரும் பகுதி நேர வேலையை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் இவ்வாறு இராணுவத்திற்கு சேர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!