பிரித்தானியா முழுவதும் போக்குவரத்து நெரிசல் – பயணிகளுக்கு அவசர அறிவிப்பு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில், பிரித்தானியா முழுவதும் போக்குவரத்து சேவைகள் மற்றும் வீதிகள் மிகுந்த நெரிசலுடன் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதி மற்றும் பயண தகவலுக்கான நம்பகமான அமைப்புகளின் தகவலுக்கமைய கிறிஸ்துமஸுக்கு முந்தைய வாரத்தில் மட்டும் 3.75 கோடி பயணங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரித்தானியா முழுவதும் எந்த ரயில் சேவையும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான லிவர்பூல் ஸ்ட்ரீட் நிலையம், கிறிஸ்துமஸ் தினம் முதல் புத்தாண்டு தினம் வரை, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த காலப்பகுதியில் பயணிகள், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யுமாறும் முன்கூட்டியே ரயில் நேர அட்டவணையை சரிபார்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு, வீதி நிலை, வானிலை மற்றும் போக்குவரத்து தகவல்களை சரிபார்த்து பயணம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள், அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, கிறிஸ்துமஸ் தினத்தன்று பெரும்பாலான உள்ளூர் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.





