பிரான்ஸிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் : சந்தர்ப்பதை பயன்படுத்திகொள்ளும் பயங்கரவாதிகளால் அச்சம்!
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவிருந்த பல தாக்குதல்களை பிரஞ்சு உளவுத்துறை முகவர்கள் முறியடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாத இறுதியில் திறக்கப்படும் ஒலிம்பிக் விளையாட்டு களியாட்டத்தில் கலந்து கொள்ள பிரித்தானிய உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குறைந்தது ‘இரண்டு தனித்தனி வழக்குகள்’ தொடர்பாக ‘பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார்.
அவர்கள் நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மேலதிக விவரங்களை தன்னால் வெளியிட முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்றைய தினம் (06.07) கைது செய்யப்பட்டவர்களில் ISIS இன் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட கோராசனுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் மையப் புள்ளியான ஸ்டேட் டி பிரான்ஸுக்கு கொலைகார பயங்கரவாதக் குழு மூன்று தற்கொலை குண்டுதாரிகளை அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.