சிவனொளிபாதமலையில் இருந்து விழுந்த வௌிநாட்டவருக்கு நேர்ந்த கதி
இரத்தினபுரி – சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 100 மீற்றருக்கும் அதிகமான பள்ளத்தில் விழுந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) முகாமில் இருந்து ஒரு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
மும்பை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பரத் சந்திரதாஸ் (25) இன்று அதிகாலை 5.00 மணியளவில் பாதுகாப்பு வேலியில் இருந்து பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் சுற்றுலா பயணிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர், நல்லதண்ணியாவுக்கு தூக்கிச் செல்லப்பட்டு, அங்கிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.





