ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!

ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (06.08) 80 வருடங்களாகுகிறது.
ஆகஸ்ட் 6, 1945 அன்று ஹிரோஷிமாவிலும், மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகியிலும் அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இது உலகம் இதுவரை கண்டிராத அளவிலான அழிவைக் கொண்டு வந்தன. குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பிய பலர் அதைத் தொடர்ந்து வந்த வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் இறந்தனர்.
நாகசாகி குண்டுவெடிப்புக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்தது, இது இரண்டாம் உலகப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்நிலையில் பல வருடங்களாக போர் மற்றும் பிற சண்டைகளில் இருந்து விலகியிருந்த ஜப்பான் தற்போது உலகளாவிய மாற்றங்களை கருத்தில் கொண்டு அரசியல் திட்டங்கள் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் டோக்கியோவிற்கு விஜயம் செய்தார், அங்கு இரு தரப்பினரும் ஏவுகணை அமைப்புகளின் கூட்டு உற்பத்தியை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் படைகளுடன் சிறப்பாக இணைந்து செயல்பட, கூட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், அதன் தற்காப்புப் படைகளின் கட்டளை கட்டமைப்பை மேம்படுத்தவும் ஜப்பான் உறுதியளித்தது.