பெண்மையை போற்றும் மகளிர் தினம் இன்று!
சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள்.
பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தின வரலாறு:
சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. எனினும், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் 1848ஆம் ஆண்டு அடிமை எதிர்ப்புப் போராட்டங்களின் போது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டன.
அமெரிக்கப் பெண்களான எலிசபெத் கேடி ஸ்டேண்டன், லூக்ரீசிய மோர் நூற்றுக்கணக்கான மக்களோடு கூடி, பெண்களின் உரிமைக்காக மாநாடு நடத்தினர். 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவில் முதல் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. 1908ஆம் ஆண்டு, பணிச்சூழல்களை எதிர்த்துப் போராடிய பின்னலாடை தொழிலாளிகளான பெண்களைக் கௌரவப்படுத்தும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் பிப்ரவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையின் போது `உணவு, அமைதி’ ஆகியவற்றிற்காக போராடினர். இது க்ரிகோரியன் நாள்காட்டியின்படி, ஐரோப்பிய நாடுகளின் மார்ச் 8 என்று கணக்கிடப்படும் நாளாக இருந்ததால், இந்த நாளின் சர்வதேச மகளிர் தினமாக காலப்போக்கில் அனுசரிக்கப்படத் தொடங்கியது.
மகளிர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்:
சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதே இந்நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும். இதனுடன், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் உரிமைகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும். இதனுடன், எந்தவொரு துறையிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுக்கும் நோக்கத்திற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்களின் உரிமைகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கருப்பொருள்:
2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் ‘பெண்களில் முதலீடு செய்யுங்கள்’ (Invests Womens) ஆகும். முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள் என்பதே இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருள் ஆகும். பெண்களை அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்துவதும், அவர்களின் மதிப்பைப் புரிந்துகொள்வதும் இதன் நோக்கமாகும்.
மகளிர் தின வாழ்த்துக்கள்:
- பிறரின் மதிப்பீடுகள் எந்த ஒரு பெண்ணுக்கும் அவசியமானதில்லை. யாரிடமிருந்தும் அனுமதி கேட்கத் தேவையில்லை.நீங்கள் சிறந்தவர் என்று உங்களுக்கே தெரியும். சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
- இந்த நாள் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளையும் பாராட்டுகளையும் தரட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
- உங்கள் நம்பிக்கை பெருகட்டும். அறிவு ரீதியிலான வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் முன்னெடுங்கள். உங்கள் வசீகரம் மகிமையில் ஒளிரட்டும்! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
- எப்போதும் வழித்துணையாக உடன் வரும் உங்கள் அன்பை, அர்ப்பணிப்பை இன்று நினைத்து பெருமை கொள்கிறோம். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!