இந்தோனேசியாவில் நேரடி ஒளிபரப்பை நிறுத்திய டிக்டாக்

இந்தோனேசியாவில் போராட்டங்கள் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பை டிக்டாக் நிறுத்தி வைத்துள்ளது.
இந்தோனேசியாவில் போராட்டங்களின் போது வன்முறை அதிகரித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் போராட்டங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வன்முறையைக் கருத்தில் கொண்டு, சிவில் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் போலீஸ் வாகனம் மோதி ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின, தற்போது போராட்டங்கள் வன்முறை நிலைக்கு உயர்ந்துள்ளன.
(Visited 2 times, 1 visits today)