இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான விபரங்களை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேற்று முதல் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பல சட்ட ஏற்பாடுகள் அமுலுக்கு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 78 times, 1 visits today)





