அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாட்டுச் சட்டங்கள் – பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வலியுறுத்தியுள்ளார்.
அலென் (Allen) நகரில் உள்ள Allen Premium Outlets கடைத்தொகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் சிலர் 5 வயதுப் பிள்ளைகள். சம்பவ இடத்திலேயே பொலிஸாரை துப்பாக்கிக்காரரைச் சுட்டுக் கொன்றனர்.
அவர் டெக்சஸின் டாலஸ் (Dallas) நகரைச் சேர்ந்த 33 வயது மவ்ரிசியோ கார்சியா (Mauricio Garcia) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இவ்வாண்டு மட்டும் 198 பெரிய அளவிலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நேர்ந்துள்ளன.
இந்நிலையில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் பற்றி பைடன் பேசியிருக்கிறார்.
(Visited 11 times, 1 visits today)