இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.