பிரித்தானியாவில் நடந்த சாலை விபத்தில் மூவர் மரணம் – 37 வயது பெண் கைது
பிரித்தானியாவின்(England) லெய்செஸ்டர்ஷையர்(Leicestershire) பகுதியில் உள்ள A46 பாதையில் நடந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 பேர் பயணித்த நீல நிற BMW வாகனம், நாட்டிங்ஹாமில்(Nottingham) இருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக லெய்செஸ்டர்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 37 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காரில் இருந்த நான்காவது நபர், சிறிய காயங்களுடன் விபத்து குறித்து தகவல் அளித்ததாக லெய்செஸ்டர்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.





