ஸ்பெயினில் ஏற்பட்ட சக்திவாய்ந்த கடல் அலையில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு
ஸ்பெயினின் பிரபலமான விடுமுறை தீவான டெனெரிஃப்பை(Tenerife) சக்திவாய்ந்த அலைகள் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
புவேர்ட்டோ டி லா குரூஸ்(Puerto de la Cruz) ரிசார்ட் அருகே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதில் ஒரு பெண் மற்றும் சாண்டா குரூஸ் டி டெனெரிஃப்பில்(Santa Cruz de Tenerife) ஒரு ஆண் உயிரிழந்ததாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.
மேலும், தீவின் வடக்கே உள்ள லா குவாஞ்சாவில்(La Guancha) தண்ணீரில் விழுந்த மூன்றாவது நபர் விமானம் மூலம் ஏற்றிச் சென்ற பின்னர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகவும் அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை தொடர்வதால், கடலோரப் பாதைகளில் இருந்து விலகி இருக்கவும், கடலில் இருந்து விலகி இருக்கவும் அவசர சேவைகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)





