செய்தி விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் ஜனவரி 7ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து இந்தியா அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

முதலில் டி20 தொடரும் அதன் பிறகு ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 22ந் தேதி தொடங்கி பிப்ரவரி 2ந் தேதியுடன் முடிகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6ல் தொடங்கி பிப்ரவரி 12ல் முடிகிறது. இந்த ஒருநாள் தொடர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியா 3 வீரர்களுக்கு ஓய்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி மாதம் இறுதியில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் இவர்கள் 3 பேருக்கும் ஓய்வு அளிப்பது அதிர்ச்சியாக உள்ளது.

(Visited 17 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி