அமெரிக்காவில் நடந்த கோர விபத்தில் மூன்று இந்தியப் பெண்கள் பலி

அமெரிக்காவில் நடந்த பயங்கர வாகன விபத்தில் இந்திய பெண்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்கள் குஜராத்தின் ஆனந்த் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
உயரிழந்தவர்கள் ரேகாபென், சங்கீதாபென் மற்றும் மனிஷாபென் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள ஒரு பாலத்தின் மீது அவர்களின் SUV சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. விபத்தில் உயிர் பிழைத்தவர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காரின் சென்சார் அமைப்பு சில குடும்ப உறுப்பினர்களுக்கு மோதல் குறித்து தகவல் அளித்தது, மேலும் அந்த குடும்ப உறுப்பினர்கள் தென் கரோலினாவின் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
(Visited 26 times, 1 visits today)