மூன்று ஹிஸ்புல்லா தளபதிகள் இஸ்ரேலிய தாக்குதல்களால் பலி
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை அது தாக்கியுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள 120 ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் 70 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைகள் மேலும் தெரிவித்துள்ளன.
ஈரானின் ஆதரவுடன் தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாா அமைப்பின் ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த தாக்குதல்களில் மூன்று ஹிஸ்புல்லா தளபதிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
அவர்களில், பின்ட் ஜபைல் பிராந்தியத்தில் உள்ள ஹிஸ்புல்லாஹ்வின் தளபதி அஹமட் ஜாபர் மதகு மற்றும் ஹிஸ்புல்லாவின் பீரங்கிப் படைத் தலைவர் ஆகியோரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.