கார்கிவ் நகரில் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஷ்டிப்பு
கார்கிவ் பிராந்தியத்தின் Hroza என்ற கிராமத்தின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உட்பட 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஸ்யாவின் இந்த தாக்குதலை இனப்படுகொலை என உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கார்கிவ் பகுதியில் நாளை முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
“இது முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து கார்கிவ் பகுதியில் ரஷ்யர்கள் செய்த இரத்தக்களரி குற்றமாகும். மூன்று நாட்கள், அக்டோபர் 6 முதல் 8 வரை, கார்கிவ் பிராந்தியத்தில் துக்க நாட்கள் அறிவிக்கப்படும்,” கார்கிவ் பிராந்திய தலைவர், Oleh Synyehubov டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)