யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய மூவர் கைது
அச்சுவேலி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தடியால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் இன்று (2) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் சொத்துக்கள் திருடப்படுவதாகவும், கிடைத்த தகவலுக்கு அமைய அந்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை சந்தேகநபர்கள் தடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து தப்பியோடிய சந்தேகநபர்கள் மூவரும் நீர்வேலி மற்றும் மடத்தடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.





