இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெய்து வரும் மழை காரணமாக இந்த பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நுளம்பு பெருகும் இடங்களை அழிக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட நுளம்பு ஒழிப்பு வாரம் நிறைவடைந்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 24,815 ஆகவும், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் பதிவாகியுள்ளது.
(Visited 7 times, 1 visits today)