அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி – இருளில் மூழ்கிய புளோரிடா மாநிலம்!
அமெரிக்காவை அண்மித்துள்ள மில்டன் சூறாவளி கரையைக் கடக்கத் தயாராகி வருகின்றது.
இந்த நிலையில், பாதுகாப்பான வெளியேற்றத்திற்கான நேரம் கடந்துவிட்டதாக புளோரிடா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எனவே, புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளின் மறு அறிவித்தல் வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அவர் எச்சரித்துள்ளார்.
மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன், சூறாவளி கரையைக் கடப்பதற்கு முன்னதாகவே, புளோரிடா மாநிலத்தில் 125 வீடுகள் சேமடைந்துள்ளது.
அத்துடன், 2 இலட்சத்து 85 ஆயிரம் பாவனையாளர்கள் மின் இணைப்பை இழந்துள்ளனர்.
இந்தநிலையில், புளோரிடா முழுவதும் சூறாவளி எச்சரிக்கைகள் ஏற்கனவே அமுலில் உள்ளதுடன், மணிக்கு சுமார் 200 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)