இலங்கையின் பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் அபாயம் – அமெரிக்கா அவசர எச்சரிக்கை
அறுகம்பே பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து காரணமாக, மறு அறிவித்தல் வரை அருகம்பேக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்துள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை கடுமையாக கேட்டுக்கொள்கின்றோம் என தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.
எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய கிழக்கு உட்படக் கிழக்கு ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள யுத்தத்தைக் கருத்திற்கொண்டு, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பன அறிவுறுத்தியுள்ளன.