இடிபாடுகள் நடுவே கைகளால் தோண்டி எடுக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோரின் உடல்கள்;காசாவில் அவலம்
இஸ்ரேல் போருக்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க உறவினர்கள் போராடி வருகின்றனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கிய பிறகு, பாலஸ்தீனத்தின் மீது போரை அறிவித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் பாலஸ்தீனத்தின் காசாவில் 11,500க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் இன்னும் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மீட்க முடியாமல் போராடி வருகின்றனர்.
இதற்கிடையில் இஸ்ரேல் காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கி நடத்தி வருவதால் போதுமான அத்தியாவசிய வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மனிதாபிமான உதவிகளையும் 2 முறை தான் இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது.இதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மீட்பு பணிகளும் தொய்வடைந்து உள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையால் காசாவில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் சிதைந்துள்ளன.இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் தங்களது உறவினர்களின் உடல்களை மீட்க இரும்பு கம்பிகளையும், வெறும் கைகளையும் பயன்படுத்தி கட்டிட இடிபாடுகளை அகற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிரிழந்து சில நாட்கள் ஆவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.