இலங்கையில் தமிழ் தெரிந்தவர்கள் பொது பணியில் சேர வேண்டும் – ஜனாதிபதி கோரிக்கை!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொதுப் பணியில் தமிழ் பேசுபவர்கள் பற்றாக்குறை உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே நிலைமை காவல்துறையிலும் இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி 2000 வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், தமிழ் தெரிந்த உங்கள் குழந்தைகளை காவல் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழ் தெரிந்தவர்கள் அரசுப் பணியில் சேர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)