செய்தி விளையாட்டு

இதுதான் கிளாசிக் ஆட்டம் – தரமான இன்னிங்ஸை ஆடிய சஞ்சு சாம்சன்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், அசத்தலான இன்னிங்ஸை ஆடி இருக்கிறார்.

தொடக்க வீரராக களமிறங்கி எந்த அவசரமும் கொள்ளாமல், பவுண்டரிகள் மூலமாக ரன்களை குவித்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

வங்கதேச அணி தரப்பில் 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வெறும் 11.5 ஓவர்களில் இந்திய அணி சேஸிங் செய்து சம்பவம் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்ற போட்டி இதுதான்.

மொத்தமாக 49 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பவுலர்களான வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

அதேபோல் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் தங்களின் ஸ்டைலில் பொளந்து கட்டினர்.

ஆனால் சஞ்சு சாம்சன் தரமான ஒரு கிளாசிக் இன்னிங்ஸை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

19 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 29 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார். இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க போராடி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த இன்னிங்ஸ் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் சஞ்சு சாம்சன் கடந்த சில ஆண்டுகளாகவே பவர் ஹிட்டிங்கை நம்பியே பேட்டிங் செய்து வந்தார்.

ஆனால் துலீப் டிராபி போன்ற தொடர்களில் விளையாடியதன் மூலமாக பந்தை சிறப்பாக டைமிங் செய்து பவுண்டரியை விளாசி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மிட் ஆன், மிட் ஆஃப் திசைகளில் அதிக ரன்களை சேர்க்க முயற்சிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அந்த திசையில் தான் அதிக ரன்களை சேர்க்க முடியும்.

இன்றைய ஆட்டத்தில் ஸ்பின்னரின் பவுலிங்கில் ஆட்டமிழந்திருப்பது சஞ்சு சாம்சனுக்கு எந்த பின்னடைவையும் கொடுக்காது.

ஏனென்றால் ஐபிஎல் தொடரிலேயே ஸ்பின்னர்களிடம் அதிகமாக விக்கெட்டை கொடுக்காத பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தான்.

தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசிய சஞ்சு சாம்சன், ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் அடுத்த 2 டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய ஒயிட் பால் அணியின் பேக் அப் விக்கெட் கீப்பராக நிரந்தர இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி